After a gap of some years now I find some time to start blogging again....
அந்த நாளை எண்ணி அசை போடுகிறேன்
"மாட்டுப்பெட்டிக்கு வோட்டு போடுங்கோ"
இதுதான் நான் முதன் முதலில கேட்ட தேர்தல் ஒலி . தேர்தல் பேச்சு ஆரம்பிச்சது 1951. எல்லோரும் வோட்டு போட்டது 1952 . ரொம்ப சின்ன வயசு. கட்சியை விட கடலைக்காய்தான் தெரியும். காங்கிரஸ் தெரியும்!
எங்க வீடு இப்போ ராதா சில்க் பக்கத்துக்கு வீடு, மைலாப்பூரிலே. எடுத்த வீட்லே ஒரு சின்ன ரூம், அதுல காங்கிரஸ் ஆஃபீஸ்.
இப்பாவும் அந்த வீடு இருக்கு. அந்த இடத்துல பம்பாய் வடா பாவு கடை இருக்கு.
திரும்பி பார்த்தா ஒரு நோட்டீஸ் குடுப்பா. சில சமயம் மிட்டாய் கூட குடுப்பா.இன்னுமும் ஞாபகம் இருக்கு ரெட்டை மாடு பெரிசா ஊர்கோலம் போகும்.
இன்னும் ஒரு காரணம் என் நினைவுல இருக்குன்னா, என் கால் ஒருத்தர் கார் ஏத்திட்டார். ரொம்ப பயந்துட்டார். நல்ல வேலை அவர் எங்க அப்பா நண்பர்தான். அப்பரம்தான் அப்பா சொன்னார், அவர் பெயர் R. M. Sundaram ICS அவர்.
மாடவீதியில் குடி இருந்ததாலே அப்பப்போ பெரிய பெரிய தலைவரலாம் வருவாம பேசுவா. முதல் முதல் பார்த்த தலைவர் ஆந்திர கேசரி பிரகாசம். தேரடியில் மீட்டிங். ஒன்னும் புரியலை. அப்பொறம் எத்தனையோ பேர்.
அண்ணாதுரை சாம்பல் கலர்லே புஷ் கோட் போட்டுண்டு வந்தார், ஈ வே ரா பெரியார் வந்தார், ராஜாஜி வந்தார். எத்தனையோ தலைவர்கள். ஈ வே ரா பேச்சு ரொம்ப புடிக்கும். சூப்பரா பேசுவார். ஜோக்கெல்லாம் அடிப்பார். திடீர்னு திட்டுவார்.
" எல்லோரும் இங்கே கை தட்டுங்க. ஒட்டு போடறப்போ மறந்து போய்டுங்க" அப்படிம்பார். ஒருதடவை மாங்கொல்லை மீட்டிங்கில்
பின்னாலே திரும்பி, " ஏன்டா வரு யாருடா ஜனாதிபதி பெரு என்னடா" ன்னார்.. பின்னாலிருந்து ஒருத்தர் " வெங்கட்ராமன்" அப்படின்னார்.
திட்டுவார் தவிர அவர் ரொம்ப நல்லவர்னு சொல்லுவாங்க. ராஜாஜிக்கு ரொம்ப நண்பராம். சும்மா பழம் மாதிரி ஜம்முனு இருப்பார்.
அப்போறோம் எத்தனையோ தேர்தல்கள் வந்தன. ஆனால் மைலாப்பூரிலே ...ராதாகிருஷ்ணன் , அரங்கண்ணல் இப்போ Dr. நட்ராஜ் ....
அரங்கண்ணல்...தி. மு. க காரர். மயிலாப்பூர் நடுத்தெருவில் கோவில் வீட்டில் வாடகைக்குத்தான் இருந்தார். எப்போ வேணுமானாலும், யார் வேணுமானாலும் பார்க்கலாம். பந்தா கிடையாது.
ராதாகிருஷ்ணனும் அதேமாதிரி ரொம்ப அமைதியானவர். எப்போதும் அவரை அவருடய முண்டக்கனி அம்மன் கோவில் தெரு வீட்டில் பார்க்கலாம்..
நான் எதுக்கு போகப்போறேன்! எல்லாம் attestation க்குத்தான்.
ஆனால் எனக்கு தெரிந்த முதல்....... காங்கிரஸ் MLA அநந்த நாயகிதான். அவருக்கும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி விஜயலக்ஷ்மிக்கும் தான் போட்டி.
தேர்தல் சமயத்துல எல்லோரும் வீட்டுக்கு வந்து " அப்பா இருக்காங்களா தம்பின்னு " கேட்பாங்க. தேர்தல் அன்னிக்கு வீட்டுக்கு கார் அனுப்பி வோட்டு போட கூட்டிண்டு போவாங்க. திரும்பி நடந்துதான் வரணும்...
மந்தைவெளி St. Rafael பள்ளிக்கூடத்துல தான் வோட்டு போடுவாங்க . கூட்டம் எல்லாம் கிடையாது.
யாரு ஜெயிச்சாங்களோ அவங்க அப்பொறம் கார்லா கும்பிட்டுண்டே வருவாங்க.
இதெல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமா .?
கார்பொரேஷன் எலேச்டின் எப்போ நடக்குதுனே தெரியாது.. சத்தமே இல்லாம நடக்கும்...
தெற்கு மட வீதி வரதப்ப செட்டியார்தான் எனக்கு தெரிஞ்சு கவுன்சிலர்? அப்பொறம் குஞ்சிதபாதம் வந்தார். ரமணி பிரஸ் ஓனர் பிள்ளை.
அப்படியெல்லாம் அமைதியாய் இருந்த, நடந்த, முடிந்த தேர்தலில், இப்போது எவ்வளவு மாற்றங்கள்!
இன்று அமெரிக்கதேர்தலை பார்க்கும்போது இதையெல்லாம் எண்ணி பார்க்கிறேன்

No comments:
Post a Comment