ஒரு நாள் ஆர்ம்ஸ்ட்ராங் ..
எனக்கு ரொம்ப ஒரு ஆசை. விண்வெளி வீரர் ஆகணும்னு . எங்க வீட்ல சொல்லுவா, உன் வெயிட்டுக்கு காத்துஅடிச்சாலே பொதும்னு.
PanAm சுமார் நாற்பது வருடத்துக்கு முன்னால அவர்கள் முதல் விண்வெளி பயணத்திற்கு டிக்கெட் கொடுத்தபோது புக்பண்ணி வெச்சிருக்கேன். First Moon Flight Club .
அதுதான் என் நினைவுக்கு வந்தது நான் இரண்டு நாள் முன்னால அமெரிக்கா கிளம்பியபோது. நானும் என் மனைவியும்வெள்ளை கவசம் அணிந்து வாசலுக்கு வந்த போது அக்கம் பக்கத்தில் வந்து வேடிக்கை பார்த்த போது ஒரு வெட்கம், தயக்கம். என் பின்னால் சிரித்தார்களோ என்னவோ.
என் இருவது வருட அமெரிக்க பயணங்களில் முதன் முறையாக AirIndia பயணம். இருவருமே சக்கர நாற்காலி பதிவுபண்ணி இருதோம்.
ட்ராலிகள் இல்லையடி பாப்பா என்று நண்பர்கள் சொன்னதவ்ல் பயந்து கொண்டெபோனோம். பயந்தபடி இல்லாமல் 50 ட்ராலிகள் இருந்தன.Airindia ஆபீஸ் எங்கே? டிப்டாப்பாக டை கட்டிண்டு பெறுதற் போனார். அவரிடம் கேட்டேன். கடவுள் தான் அவர். உடனே என் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ட்ராலியை தள்ளிக்கொண்டு அவரே என்னை ப்ளன்வாசல் வரைக்கும் அழைத்து சென்றார். அவர் யார் என்று கேட்டால் wheelChairExecutive. நல்ல உள்ளம் .
எல்லாம் அந்த சந்திர மண்டல உடுப்புடன்தான்.
முதல்ல ஒருதயக்கம். என்ன நினைப்பார்கள் மற்றவர் என்று. ஆனால் ஏர்போர்ட்ல போய் பார்த்தல் என்னை மாதிரிஇன்னும் சில வின் வெளி வீரர்கள், வீராங்கனைகள். சொல்ல கூடாது, அந்த ட்ரெஸ்ஸுக்கு ஒரு தனி மரியாதை. கொஞ்சம் தள்ளி நின்று விசாரித்தார்கள். அதுவும் அந்த இம்மிகிரேஷன் நண்பர்கள்.. “ சார் அங்கேயே உட்காருங்கள், நாங்கள் போட்டோ எடுக்கிறோம்னு, எதோ நம்மளை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டார்கள்.
ஏர் இந்தியா, ஒரு மரியாதை, ஒரு அடக்கம் செக் இந்த முடிந்த இம்மிகிரேஷன் போவதற்கு முன், ஒரு அழகான மாமிகைல ஒரு பய் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். எனக்கு என்னமோ கல்யாண தாம்பூலம் மாதிரி தோணினது. பிரிச்சுபார்த்தால் ஒரு முகமூடி, முக கவசம் மற்றும் ஒரு ஐந்து இல்லை ஆறு சின்ன பாண் பராக் பொட்டலம். இது என்னடா, இது தான் தடையோ செய்யப்பட்ட பொருள் ஆச்சேன்னு பிரிச்சு பார்த்தல். தந்து சானிடிஸிர்.
அதுதான் ஒரு பை நிறைய இருக்கே நம்மிடம். ஆனாலும் தூக்கி எறிய மனமில்லாமல் வைத்துக்கொண்டேன்.
கலர் கலரா பார்த்த பழக்கத்தில் விமானத்திற்குள் நுழைய போனால் ஒரு கணம் பிரேக். எங்கே போகிறோம், எந்தஇடம் இது.
ஆபரேஷன் தியேட்டர் மாதிரி தான் இருந்தது. தேவதைகள்தான் ஆனால் வெள்ளை உடுத்திய தேவதைகள். எல்லாம்அந்த கொரோன டிரஸ். அப்புறம் நினைத்தேன், நம்மள மாதிரின்னு.
குழந்தையாய் இருந்தப்போ ( இப்பவும் குழந்தை மனம்தான்) சென்னை எழும்பூலேர்ந்து திருச்சி காலைல 1000 மணிக்கு கிளம்பினா, ராத்திரி 0900 மணிக்கு போகும். சாப்பாடு, டிபன், தண்ணி எல்லாம் எடுத்து போகணும். தண்ணிதீர்ந்து போனால் வழியில் ரயில்வே ஸ்டேஷனை பிடிக்கணும். அதுதான் இப்பவும் ஞாபகம் வந்தது.ஆரிப்போன ரொட்டியும் சில பல பிஸ்கட்டும் தான். தண்ணி பாட்டில்.
முதல் அடியில் என் பிசினஸ் கிளாஸ் கனவுகள் காலி.
ஆனால் நல்ல வேலை எங்கள் விண்வெளி வீரர் டிரஸ் பார்த்து யாரும் சிரிக்க வில்லை. ஓர் சில பயணிகளும் ஏர்ஹோஸ்டஸ்களும் வெள்ளை ட்ரெஸ்ஸில். ராத்திரி கண் விஷித்து பார்க்கும்போது ஒரு பயம். ஆவி உலகம் மாதிரி. முன்பக்கம், முகத்தை ஓஆர்த்தால் தான் ஆனா பெண்ணை தெரியும்.
ஐதரதராபாத்தில் செம்ம மழைமழை. பின்னால் தான் தெரியும் வெள்ளம் பற்றி. அந்த ஆண்டவனும், தேவதைகளும்எங்களை பத்திரமாக டில்லி சென்டுன்சேர்த்தனர். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எல்லா பிளானும் வெள்ளத்தில்பொய் இருக்கும். அப்பாப்பா எவ்வளவு டென்ஷன்!
சொல்ல கூடாது, நம்ம சென்னை சென்னைதான். கொரோனானால் ஒரு பயம். முகமூடி, க்ளோவ்ஸ் எல்லாம். அந்தடெல்லிக்காரன் தைரியம் ( அலட்சியம்) கோவில்ல பிரசாதம் வாங்கற மாதிரிதான். மேல ஓரி இடி, தோளில் ஒரு பிடிஎப்படி அந்த கூட்டத்தில் இருந்து தப்பித்தோம் என்பது அந்த வீல் ஷேர் ஆளுக்குத்தான் தெரியும்.
டெல்லி வாஷிங்டன் பயணம் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. அதே வெள்ளை தேவதைகளும், தூதர்களும். அதே ஆறிப்போன ரொட்டியும் பீசுகட்டும் தான். முக்கியமா நான் மிஸ் பண்ணினது தலைகாணியும் போர்வையும் தான். நல்ல வேலை போன வாரம் போன நண்பன் ஸ்ரீநிவாசன் சொன்னதால், போர்வை தலைகாணி எடுத்து போனேன். தப்பிச்சேன்.
எல்லா கஷ்டத்தையும் மறக்க வைத்தது காலைல கொடுத்த சூப் காபி. முதல்ல ஏறினவுடனே நான் கேது காலையில்காபி கொடுப்பீர்களா.
உண்டு என்றவுடன் கொஞ்சம் நிம்மதி.
சொல்ல மறந்துட்டேன்! அந்த சந்திர மண்டலா டிரஸ் இருக்கே, குளிருக்கு அடக்கமா இருந்தது. ஆனால் பாத்ரூம்போயிட்டு வரதுக்குள்ள நான் ஒரு சர்க்கஸ் பண்ணினேன்.
இப்படி திரும்பினால் ஒரு இடி, கையை நீட்டினால் ஒரு குத்து, ரொம்ப பொறுமை, இதற்கு நடுவில் இயற்கை உபாதை. அந்த டிரஸ் ஓரு செயற்கை உபாதை. எப்படா அதை கழட்ட போறோம்னு ஒரு ஏக்கம். நல்ல வேலை நான் மெலிந்தஆள்.
அமெரிக்க நேரம் ஆறு மணி ஆனவுடன் அந்த சூரியன் தெரிந்தான் ஆதி வானில். ஒரு பயம் விட்ட உணர்வு, நம்இடத்துக்கு வாந்தி விட்டோம் என்ற எண்ணம், குழந்தைகளை பார்க்க போகும் குதூகலம் , கஷ்டத்தை மறக்கவைத்தது. முதலில் செய்த காரியம் என் சந்திர மண்டல ஆடையை கழட்டி எரிந்தது தான். முகமாயிடியும், கவசமும்உண்டு.
டல்லஸ் விமான நிலையத்தை தொட்டவுடன் “அப்பாடா" என்ற ஒரு பெரு மூச்சு, அதே சமயம் 10 மாதம் கழித்துவறோமே என்ன கேட்பானோ என்ற பயம். சொல்ல கூடாது, அந்த சக்கரத்தாழ்வார்தான் காப்பாற்றினார். சும்மாசுர்ருன்னு தள்ளிண்டு பொய் எல்லாம் முடித்தார். இம்மிகிரேஷன், பேட்டிகள் எல்லாம் காத்திருந்தன. ஒரு கேள்விகேட்க வில்லை.
இந்த இடத்தில் என் பெண், பிள்ளை உபதேசங்கள் எல்லாம் நியாபகம் வந்தது. முகமூடி, டிரஸ், ஸ்பிரேய, க்ளோவ்ஸ்எல்லாமே அவர்கள் அறிவுரைப்படிதான். ஆனால் அவ்வளவும் என் சொன்னார்கள் என்பது அந்த இம்மிகிரேஷன்முன்னாள் நின்றபோது தெரிந்தது. ஒருவரும் முக மூடி கிடையாது. எதோ கொரோனாவுக்கும் அவர்களுக்கும் சம்மதமேஇல்லை போன்ற ஒரு நினைப்பு. இத்தனைக்கும் உலகத்திலேயே அதிகமான மக்கள் அங்குதான் கொரோனாவால்தாக்கப்பட்டவர்கள். எல்லாமே ஒரு அசட்டு தைரியமா, அகம்பாவமா தெரியலை.
அப்பத்தான் தெரிந்தது இந்தியா எவ்வளவோ மேல் என்று.
மாப்பிள்ளை காரில் ஏகப்பட்ட முன்ஜாக்கிரதை, சீட்ல துணி, பேட்டி எல்லாம் ஸ்பிரே எப்படிடா வீட்டுக்குள்ள பின்வாசல் வழிய வந்துட்டோம்.
குளித்துவிட்டு அன்று எங்கள் ரூமுக்கு வந்தவர்கள், இன்னும் இருக்கிறோம்.. தனிமைப்படுத்தப்பட்டு...குளிரண்டைன் ..
நானும் 2001ம் ஆண்டு முதல் அமெரிக்கா வருகிறேன். சுமார் 15 தடவை வந்தாச்சு, ஆனால் இந்த முறை பயணம் மறக்கமுடியாது.
ஒன்னு மட்டும் புரியலை. ஏர் இந்தியா, ரெண்டு பங்கு காசு வாங்கிக்கொண்டு இந்தமாதிரி மட்டமான ஒரு பயணத்தைகொடுக்க வேண்டுமா.
என் முதல் பயணம் ஏர் இந்தியாவில். பிசினஸ் கிளாஸ். போன வுடன் பேஸ்ட் பருச் கிடையாது, சாப்பாடு கிடையாது, ட்ரிங்க்ஸ் ஹாட்/ கோல்டு கிடையாது. சரி எதற்குமந்த டிவி கூட கிடையாது. என் மண்பொடி இதுதானா ஏர் இந்திய. என்ன இருந்தாலும் எமிரேட்ஸ் இல்லை கத்தார் மாதிரி வருமா ...
சரி. இன்னம் 10 நாள் ஆனாலும் ஜெட் லாக் போகலை.. தூக்கம் வரத்து.. அப்பொறம் பாக்கலாம்..
பை பை ...
🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல முயற்ச்சி. பழக்கப்பட்ட மொழியால் சில வார்த்தைகளை , தவறுகளை மீறி புரிந்து கொள்ள முடிந்தது. திரும்பப் படித்து இருந்தால் பல எழுத்துப் பிழைகளை தவிர்த்திருக்கலாம் - சொல்ல வந்ததை புரிந்து கொள்ள முடிகிறது - அது போதுமே !!
ReplyDeleteToday only i got to read ur blog. Very nicely written and humourous too.
ReplyDelete