Search This Blog

Tuesday, 14 February 2023

 காதலர் தினம்.…

அப்படின்னா என்ன? . 

என்னை பொறுத்த வரை, இதற்கு ஏன் தனி தினம்?


கல்யாணம் ஆகி 53 வருஷம் ஆச்சு. 


ஒரே பொண்ணு பார்த்தேன். மூஞ்சியை காண்பிக்காமல் அரை வெளிச்சத்தில் பார்த்தது.  ஒரே ஒரு பாட்டு,…மரகதவல்லி... வாம்மா மின்னல்... போயாச்சு..அப்புறம் வீட்டில் வந்து அம்மா புகழ் பெண்ணை பற்றி.எதோ நான் பார்க்காதது மாதிரி! மூணு மாசம் கழித்து கல்யாணம்.


இப்போ மாதிரி பெண்ணும் பிள்ளையும் ஹோட்டல் போறது, பேசறது எல்லாம் கிடையாது. போட்டோவும் கிடையாது. 


அடுத்த மாசம் நிச்சயதார்த்தம்/ லகுண பத்ரிகை. அதுவும் பெண் பிள்ளை மீட் கிடையாது.


பெண்ணு முகமே மறந்து விட்டது. அம்மாவிடம் சொல்லு வேன் , ரோட்ல ஏதாவது    ஒரு பெண்ணை பார்த்தல்..” இந்தமாதிரி இருந்தால் பண்ணிக்க மாட்டேன்" 

அம்மா, நினைச்சிருப்பாள், இவன் என்னமோ பெரிய மன்மதன்னு. என்கிட்டை சொல்லலை.


பெண்ணை கல்யாணத்தன்னைக்கு மாலை மாத்தின போதுதான் பார்த்தேன். தேவலை.. எனக்கும் அழகான மனைவின்னு.

தேன் நிலவு எல்லாம் கிடையாது. 


53 வருடம் ஆகிவிட்டது. ரெண்டு குழந்தைகள். பிள்ளையும் பெண்ணும் கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள்.


நாங்களும் பாங்குல ஓய்வு  பெற்ற பிறகு  அமெரிக்கா வாசி.


தனியாக அன்பு செலுத்த தெரியாது.  திடீர்னு, “ இன்னக்கி பஜ்ஜி போடட்டுமா"  “ இன்னக்கி என்ன சமையல் பண்ணட்டும்" என்று மனைவியும்,  இந்த புடவை நன்றாக இருக்கிறதே அந்தக்கடையில் இருந்து அவள் கேட்கலாமல் வாங்குவதும், GRT ல அந்த necklace பார்த்தா அவளுக்கு தெரியாமலே வாங்கி கொண்டு வைத்து அவளை ஆச்சர்ய படுத்துவதிலும் எங்கள் வாஸ்க்கை ஓடியது.


இன்னும் எங்கள் அன்பு எங்களையும் அறியாமல் வெளிப்பாடு தருணம், ரோடு கிராஸ் பண்ணும்போது  கையை பிடித்து கொள்வது தான்..


நாங்கள் இருவரும் 75 வயசை கடந்து விட்டோம்...


ஆனால் எங்களுக்கு தினமும் காதலர் தினம்தான்...


ஆண்டவன் செயலில் இப்போது கவலைப்படுவது உடலை நிலை பற்றித்தான்..


எங்களை இதனை நாள் வழி நடத்தி காப்பாற்றிய ஆண்டவனுக்கு எங்கள் நன்றி 🙏

No comments:

Post a Comment