Search This Blog

Sunday, 19 March 2017

தட்டுங்கள் திறக்கபடும்...

தட்டுங்கள் திறக்கபடும்...

அமெரிக்காவில் இருக்கும் பிள்ளையிடம் பேசவேண்டுமா, புதுசா நேற்று பிறந்த பேரனை பார்க்க வேண்டுமா,
பேத்தி கல்யாணத்தை தாத்தா அமெரிக்காவில் இருந்து பார்க்கவேணுமா... எல்லாம் ஒரு பட்டனை அமுக்கினா நடக்கும்.
கல்யாணத்துக்கு பெண் பாக்கறது, பிள்ளை செலக்ட் பண்ணிட்டு நம்மிடம் பெண் போட்டோவை காமிக்கறது எல்லாமே ஒரு நொடி விஷயம்...

எவ்வளவு முன்னேற்றம்.

2001க்கு முன் , ஒரு போன் லைனுக்கு புக் பண்ணிட்டு கருப்பா ஒரு டயல் பண்ற போன் வருமே, எவ்வளவு வருஷம் ஆகும்! சுமார் நாலு முதல் அஞ்சு வருடங்கள். சரி, வந்தது, போன் பண்ணினா எதனை முறை  சுற்ற  வேண்டும். காய் விரல்தான் வலிக்கும் லயன் கிடைக்காது.
இது உள்ளூர் எங்களுக்கு. வெளியூர் என்றால் கேட்கவே வேண்டாம்.
'90 களின் ஆரம்பத்தில் STD கிடையாது. புக் பண்ணிவிட்டு காத்திருக்க விடும். வீட்ல போனே இல்லாமல் பக்கத்து மளிகை கடைக்கு
போய் போன் பண்ணினால், வீட்டுக்கு வரவும் முடியாது, காத்திருக்கவும் முடியாது. கடைக்காரன், நம்மை பார்க்கும் பார்வைல ஒரு அலட்சியம் இருக்கும்.

1988ல் என் தந்தை இறந்தபோது எங்கள் வீட்டு மாப்பிள்ளை ஒருவருக்கு சொல்லவேண்டி வந்தது. அவர் சென்னை RBI ல் வேலை செய்பவர்! கும்பகோணத்துக்குவேலை நிமித்தம் சென்றிருந்தார். அன்று டெலிபோன் வேலை நிறுத்தம். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் என் தந்தை இருந்ததே தெரியாமல் நாலாம் நாள் வந்தார்.

இப்போது இன்று பங்கு சந்தையில், ஒரு ஷேர் வாங்கினால் மூணாவது நாள் உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது. 1995ல் ஸ்டேட் பேங்க் பங்கை வாங்கிவிட்டு அதை பதிவு செய்து என் கணக்கில் கொண்டு வரும் பொது நான் பட்ட கஷ்டம் ரொம்ப ரொம்ப.
 கை எழுத்து சரியில்லை என்று சொல்லி கடைசியில் வரவே இல்லை...

ம்ம்ம்ம்ம்ம்

கடந்த 20 வருடங்களில் எவ்வளவு மாற்றம் . எவ்வளவு எளிதாககத் தொடர்புகள்....

இந்தியா முன்னேற வில்லை என்று சொல்பவர்கள் யோசிக்க வேண்டும்..

நீங்களும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே

No comments:

Post a Comment