Search This Blog

Sunday, 13 August 2017

அது ஒரு கனாக்காலம்...

குட்டி கிருஷ்ணர், தவழ்ந்த  கிருஷ்ணர், வெண்ண தாழி கிருஷ்ணர்... ராமன் எத்தனை ராமனடின்னு பாடின மாதிரி.. கிருஷ்ணன்  எத்தனை கிரிஷ்ணனடின்னு பாடத்தோணும்.. வரிசை வரிசையாய் அழகான கிருஷ்ணன் பொம்மை.. சந்நிதி தெரு முழுக்க ரொம்பி வழியும்..
மனசால வாங்கி அதற்கு ஒரு அலங்காரம் பண்ணும் கற்பனை.. எல்லாம் , மூணு அணாதான்.. ஆனால் காசு ஏது? கற்பனைதான்..
இதில் ரொம்ப குழப்பம் நீல கிரிஷ்ணனா, ரோஸ் கலர் கிரிஷ்ணனா... அப்பா வாங்கி கொடுத்தாலும், இது பெரிய குழப்பம்...

மூணு நாள் முன்னாலே அம்மா கச்சேரி ரோடு மெஷினுக்கு பொய் மாவு அரைக்க சொல்லுவா.. சில சமயம் அம்மாவும் கூட வருவா..
கிருஷ்ண ஜெயந்திக்கு ஒருநாள் முன்னாடியே வீடு களை கட்டும்.. வாசனை மூக்கை துளைக்கும்.. அம்மா ரொம்ப கண்டிப்பு..
சாமி நெவேத்தியம் பண்ணாம ஒன்னும் சாப்பிட கூடாது.

ஆனால் சீடைக்கு யாரு உருட்டறது.. நான், என் தம்பி தங்கைகள்தாம்.. அப்பப்போ அம்மா " டேய் வாயில போட்டுண்டுறாதே " ஒரு சத்தம் வரும்...

முக்கியமா வெல்ல சீடை, உப்பு சீடைதான்.. சில சமயம்  அம்மா தேன்குழல் போடுவா, இல்லை தட்டை பண்ணுவா.
ஆனால் நெய்வேத்தியத்துக்கு சீடைதான்.

மத்தியானம் அம்மா வாசல்லேர்ந்து பூஜை வரை கால் கோலம் போடுவா. அதுல எத்தனை வகை.! முறுக்கு மாதிரி போடுவா.. சிலர் வீட்லே பாதம் மாதிரியே போடுவா. அதுக்கு மிதிக்காமல் இருக்க காவல் வேறே .

மத்தியானம் 0400 மணிக்கு பூஜை..அவல் பாயசம், பட்சணம், வெண்ணை. தயிர் எல்லாம்...
வாத்தியார் எல்லாம் கிடையாது. அம்மாவே பண்ணுவா.
ஆனால் அந்த தீபாராதனை ஆரம்பிச்சவுடன் ஒரு சந்தோசம்.. ஆளுக்கு கைலே ஒரு கிண்ணம். தயார்...

உப்புசீடை, அதுல சீப்பி வேற, வெல்லசீடை எடுத்துண்டு ஓடிடுவோம்...
அம்மா கத்துவா.. சாமிக்கு நமஸ்காரம் பண்ணுங்கோன்னு...

எத்தனை சுகமான எண்ணங்கள், சந்தோஷங்கள், எதிர்பார்ப்புகள்...
அம்மா போயாச்சு, தம்பி போயாச்சு.. எத்தனையோ சம்பிரதாயம் மாறிவிட்டது..

எல்லாம் கனவாகிவிட்டன....மறுபடியும் வருமா அந்த சந்தோசம்?

அது ஒரு கனாக்காலம்..

No comments:

Post a Comment